கலெக்டர் அலுவலகத்தில், பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தில், பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jan 2017 10:57 PM GMT (Updated: 2017-01-31T04:27:01+05:30)

நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மனு நீதி நாள் முகாம் நடைபெறுவது வழக்கம்.

நாகர்கோவில், ஜன.31–

நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மனு நீதி நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். இதுபோல் நேற்றும் மனு நீதி நாள் முகாம் நடந்தது. முகாமில், மாவட்டத்தில் பல இடங்களில் இருந்தும் பொதுமக்கள் மனு அளிக்க வந்து இருந்தனர். குறும்பனை சுனாமி காலனியை சேர்ந்த ஸ்டெல்லா என்பவரும் மனு அளிக்க வந்திருந்தார். அவர் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அருகில் நின்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. மயங்கி விழுந்த ஸ்டெல்லாவை ஆம்புலன்சுக்கு அழைத்து சென்று நர்சுகள் முதலுதவி அளித்தனர். அதன் பிறகு அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story