காந்தி உருவ படத்துக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை


காந்தி உருவ படத்துக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 30 Jan 2017 11:06 PM GMT (Updated: 30 Jan 2017 11:06 PM GMT)

காந்தி நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில், அவரது உருவபடத்துக்கு மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி நினைவு தினம்

மகாத்மா காந்தியின் 70-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்தி கட்டத்தின் மீது அவரது முழு உருவப்படம் அலங்கரித்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

கலெக்டர் மரியாதை

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காந்தியின் அஸ்தி கட்டத்தில் மலர் தூவி வணங்கினார்.

நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு, மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி காந்தி, கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் திவான் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டு பிரார்த்தனை மற்றும் தேசபக்தி பாடல் பாடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நூல் நூற்கும் வேள்வி

குமரி மாவட்ட சர்வோதய சங்கம் சார்பில் காந்தி மண்டபத்தில் சர்வோதய சங்க பெண்கள் ராட்டையில் நூல் நூற்பு வேள்வியை தொங்கினர். இந்த நூற்பு வேள்வி கன்னியாகுமரி கடலில் காந்தியின் அஸ்தி கரைத்த நினைவு நாளான பிப்ரவரி 12-ந் தேதி வரை நடக்கிறது. இதில், பெண்கள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராட்டையில் நூல் நூற்பார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும் பங்கேற்று ஆர்வத்துடன் ராட்டையில் நூல் நூற்றனர். 

Next Story