குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்கள் கலெக்டர் மலர்விழி தகவல்


குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்கள் கலெக்டர் மலர்விழி தகவல்
x
தினத்தந்தி 3 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-03T18:56:58+05:30)

சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் ஏற்படும் குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

சிவகங்கை,

குடிநீர் பிரச்சினை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் மாவட்டத்தில் வறட்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்கு ஆங்காங்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விவரங்களை சேகரித்து அரசிற்கு அனுப்பி வைக்கவும், அவைகளை சரி செய்யவும் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காகாணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட அளவிலான குழுவின் கண்காணிப்பு அலுவலராக ஊராட்சிகள் உதவி இயக்குனர் நியமிக்கபட்டுள்ளார். எனவே பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட அளவில் 74026 08352 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1077–ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

செல்போன் எண்கள்

இதேபோல் வட்டார அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே வட்டார அளவில் புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அந்தந்த வட்டார அளவில் புகார் தெரிவிக்கலாம்.

அதன்படி சிவகங்கை 99658 78653, காளையார்கோவில் 94436 09150, மானாமதுரை 94863 26263, திருப்புவனம் 94426 73654, இளையான்குடி 95977 28877, தேவகோட்டை 94427 63969, கண்ணங்குடி 94429 86661, சாக்கோட்டை 97890 13035, கல்லல் 95857 03999, திருப்பத்தூர் 80563 25010, சிங்கம்புணரி 95973 86711, எஸ்.புதூர் 74029 08107 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story