தர்மபுரியில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்  மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-03T19:29:52+05:30)

தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் தர்மபுரி கிளை சார்பில் கோரிக்கை

தர்மபுரி,

தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் தர்மபுரி கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க இணைசெயலாளர் அன்பரசு தலைமை தாங்கினார். கிளைத்தலைவர் சிங்காரவேல், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சரவணன், சி.ஐ.டி.யு. சங்க இணைசெயலாளர் செல்வம், மாவட்ட செயலாளர் நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது, மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கான உபகரணங்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பதை தவிர்க்க வேண்டும். மருந்து உற்பத்தி துறையில் அன்னிய முதலீட்டை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும். மருந்து வியாபாரத்தில் முறையற்ற விற்பனை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story