ஏரல் அருகே, வீடுபுகுந்து 2 பேரிடம் 12½ பவுன் நகைகள் பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஏரல் அருகே, நள்ளிரவில் வீடுபுகுந்து தூங்கிக் கொண்டிருந்த 2 பேரின் கழுத்தில் கிடந்த 12½ பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்
ஏரல்,
ஏரல் அருகே, நள்ளிரவில் வீடுபுகுந்து தூங்கிக் கொண்டிருந்த 2 பேரின் கழுத்தில் கிடந்த 12½ பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை
ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவருடைய மகன் முத்து (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவருடைய அண்ணன் இளையராஜா. விவசாயி. இவருடைய மனைவி சுமதி. நேற்று முன்தினம் இரவில் அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
மர்மநபர் புகுந்தார்
நள்ளிரவில் மர்மநபர் முத்துவின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த சுமதி கழுத்தில் அணிந்து இருந்த 11 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் நைசாக பறித்தார். பின்னர் பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந்த முத்துவின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். உடனே கண்விழித்த முத்து மர்மநபரை பார்த்ததால் ‘திருடன் திருடன்‘ என்று கூச்சலிட்டார். ஆனால் இளையராஜா மற்றும் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர் 12½ பவுன் தங்க நகைகளுடன் இருளில் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் வழக்குப்பதிவு செய்து, தங்க நகைகளை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்.

Next Story