ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2017 9:45 PM GMT (Updated: 3 Feb 2017 7:00 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு,

விலைவாசி பலமடங்கு அதிகரித்து இருப்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 40 சதவீதம் ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பல்வேறு காரணங்கள் கூறி நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.சின்னசாமி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் மனோகர், லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் லட்சுமணன், மாநிலக்குழு உறுப்பினர் ஜெயபால் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நடராசன், நகர செயலாளர் கிருஷ்ணன், மகளிர் சங்க பொறுப்பாளர் அம்மணியம்மாள் உள்பட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story