ஈரோட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2017 9:45 PM GMT (Updated: 3 Feb 2017 7:00 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு,

தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பறக்கும் படை உறுப்பினர்களுக்கு ஒரு நாளில் ரூ.500 படியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் திம்மராயன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் சீனிவாசன், தலைமையிட செயலாளர் மோகன், மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நேரு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் மாவட்ட தனியார் பள்ளி செயலாளர் செந்தில்குமார் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாவட்ட செயலாளர் பொன்னுசாமி வரவேற்று பேசினார். முடிவில் பொருளாளர் அருள்குமார் நன்றி கூறினார்.


Next Story