விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் கட்டிட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்


விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் கட்டிட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Feb 2017 10:30 PM GMT (Updated: 3 Feb 2017 7:06 PM GMT)

விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கட்டிட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கும்பகோணம்,

செயற்குழு கூட்டம்

தேசிய கட்டிட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பாபநாசம் ஒன்றிய செயற்குழு கூட்டம் சுவாமிமலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் பாபநாசம் ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய துணை தலைவர் வீரதுரை, ஒன்றிய அமைப்பாளர் வடிவேல், ரவிக்குமார், கிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் கஜேந்திரன் வரவேற்றார். இதில் சங்கத்தின் மாநில தலைவர் ராமஜெயம், பொதுச்செயலாளர் மதிவாணன், பொருளாளர் கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

நிரந்தர தீர்வு

விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவதுபோல், கட்டிட தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு கண்டனம் தெரிவிப்பது, விபத்தில் பலியாகும் கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ராஜசேகர் நன்றி கூறினார்.


Next Story