அண்ணா நினைவு தினத்தையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொதுவிருந்து


அண்ணா நினைவு தினத்தையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொதுவிருந்து
x
தினத்தந்தி 3 Feb 2017 7:11 PM GMT (Updated: 2017-02-04T00:41:45+05:30)

அண்ணா நினைவு தினத்தையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார்.

திருவாரூர்,

பொதுவிருந்து

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் காகிதக்காரத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பொதுவிருந்து நடந்தது.

இதே போல வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பொதுவிருந்து நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவகுமார், ஆய்வாளர் தமிழ்மணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Next Story