மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் கோவை காளைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன


மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் கோவை காளைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன
x
தினத்தந்தி 3 Feb 2017 9:30 PM GMT (Updated: 2017-02-04T01:39:24+05:30)

மதுரை பகுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க கோவை காளைகள் லாரிகள் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஜல்லிக்கட்டு

மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் பெரும்பாலும் தென் மாவட்டங்களை சேர்ந்த காளைகள் தான் பங்கேற்கும். இந்த நிலையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அவனியாபுரத்திலும், 8–ந் தேதி தொட்டப் பநாயக்கனூரிலும், 9–ந் தேதி பாலமேட்டிலும், 10–ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் கோவையை அடுத்த வெள்ளியங்கிரி கோசாலையில் இருந்து 9 காளைகள் கலந்து கொள்கின்றன.

கடந்த 2014–ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளை மாடுகளை வளர்க்க ஆர்வம் காட்டுவது குறைந்தது. மேலும் அவை இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் நிலை ஏற்பட்டது.

கோசாலை

இந்த நிலையில் கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சாவயல் என்ற இடத்தில் கோசாலை வைத்து நடத்தி வரும் சிவகணேஷ், மதுரை பகுதிக்கு சென்று 210 காளைகளை விலைக்கு வாங்கி, கோவையில் உள்ள தனது கோசாலையில் பராமரித்து வருகிறார். அதில் 9 காளைகள் மதுரை மாவட்ட பகுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள லாரிகள் மூலம் நேற்று இரவு கோவையில் இருந்து கொண்டு செல்லப்பட்டன.

இது குறித்து வெள்ளியங்கிரி கோசாலை உரிமையாளர் சிவகணேஷ் கூறியதாவது:–

இங்கு பராமரித்து வரும் 210 காளைகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறோம். அவற்றில் சூர்யா, கருப்பன், சிவா, முத்து, வெள்ளிங்கிரி, கணேஷ், மன்னன், ராமு, கம்பன் ஆகிய 9 காளைகள் மதுரை மாவட்ட பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story