வாரியங்காவல் கிராமத்தில் வேகத்தடை அமைக்கக்கோரி இந்து முன்னணியினர்– பொதுமக்கள் சாலை மறியல்


வாரியங்காவல் கிராமத்தில் வேகத்தடை அமைக்கக்கோரி இந்து முன்னணியினர்– பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-04T02:44:38+05:30)

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வாரியங்காவல் கிராமத்தில் வேகத்தடை அமைக்கக்கோரி இந்து முன்னணியினர்– பொதுமக்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வாரியங்காவல் கிராமத்தின் வழியாக செல்லும் சாலையில் அதிக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதால், வாரியங்காவல் பஸ் நிறுத்தம், திடீர் குப்பம் ஆகிய 2 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் நேற்று ஜெயங்கொண்டம்– செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்து முன்னணி ஆண்டிமடம் ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 பேச்சுவார்த்தையை அடுத்து போலீசார் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

 இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், செந்துறை ஒன்றிய செயலாளர் சபரி, விஜய், ரமேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story