அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க.வினர் மரியாதை


அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க.வினர் மரியாதை
x
தினத்தந்தி 3 Feb 2017 9:40 PM GMT (Updated: 2017-02-04T03:10:49+05:30)

நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காஞ்சீபுரம்,

நினைவு நாளையொட்டி  அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாலை அணிவித்து மரியாதை

காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன் உள்பட ஏராளமானோர் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காஞ்சீபுரம் நகராட்சி முன்பு உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன், செய்யாறு எம்.எல்.ஏ. தூசி மோகன், அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, நிர்வாகிகள் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமையில், எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், நகர செயலாளர் சன்பிராண்டு கே.ஆறுமுகம், மாநில நெசவாளர் அணி செயலாளர் டி.அன்பழகன், வி.எஸ்.ராமகிருஷ்ணன், சி.வி.எம்.அ.சேகர் உள்பட நிர்வாகிகள் காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் இருந்து அமைதியான முறையில் ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

ம.தி.மு.க.

காஞ்சீபுரம்  மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி தலைமையில் ஏராளமான ம.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story