முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2017 10:15 PM GMT (Updated: 3 Feb 2017 9:41 PM GMT)

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது

திருச்சி,

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அந்தோணி அன்பரசு தலைமை தாங்கினார். மாநில மகளிரணி இணை செயலாளர் பபிஸ்டாமேரி இனன்சியா முன்னிலை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் மகேசு, மாவட்ட தணிக்கையாளர் பயஸ்பால் லோகநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். விடைத்தாள் திருத்துவதற்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அனைத்து வசதிகளுடன் கூடிய விடைத்தாள் திருத்தும் மையத்தை அமைக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும்போது உள்ளூர் ஆசிரியர்களுக்கு தினப்படியாக ரூ.300-ம், வெளியூர் ஆசிரியர்களுக்கு ரூ.400-ம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக மாவட்ட செயலாளர் அன்புசேகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் லோகநாத கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். 

Next Story