தைப்பூச திருவிழாவையொட்டி குளித்தலையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்


தைப்பூச திருவிழாவையொட்டி குளித்தலையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 7 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-08T03:08:23+05:30)

தைப்பூச திருவிழாவையொட்டி குளித்தலையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

குளித்தலை,

ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று குளித்தலை கடம்பவனேசுவரர், அய்யர்மலை, கருப்பத்தூர், ராஜேந்திரம், பெட்டவாய்த்தலை, முசிறி, திருஈங்கோய்மலை, வெள்ளூர் ஆகிய 8 ஊர் சாமிகள் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரை பகுதியில் ஒன்றுகூடி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை பார்க்க பல ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்துசெல்வார்கள். இவர்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள், சாலை சீரமைப்பு, மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை கடம்பந்துறை காவிரி ஆற்றின் கரையிலேயே தீர்த்தவாரி நடத்தப்பட்டு வந்தது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் ஆற்றின் நடுவில் தண்ணீர் செல்லும் பகுதியில் பெரிய பள்ளம் அமைத்து அதில் தீர்த்தவாரி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி சாமிகளை ஆற்றின் நடுவில் கொண்டு செல்லவேண்டி இருப்பதால் காவிரிக்கரையில் உள்ள பள்ளங்கள் மூடப்பட்டு சாமிகளை ஆற்றின் நடுவில் கொண்டு செல்லும் வகையில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Next Story