மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 337 வழக்குகளுக்கு தீர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒரே நாளில் 337 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
புதுக்கோட்டை,
மக்கள் நீதிமன்றம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், திருமயம், புதுக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் உள்ள சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான இந்திராணி, கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதி சாய்ப்பிரியா, தலைமை குற்றவியல் நீதிபதி அனில்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரின்ஸ்சாமுவேல்ராஜ், மகிளா நீதிமன்ற நீதிபதி லியாகத்அலி, ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிர மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
337 வழக்குகளுக்கு தீர்வு
இதில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட 5 ஆயிரத்து 814 வழக்குகளில் 337 வழக்குகளுக்கு ரூ.5 கோடியே 90 லட்சத்து 43 ஆயிரத்து 538 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.
இந்த மக்கள் நீதி மன்றங்களில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளை வக்கீல்கள் சங்கம், நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தீர்வு காண முடிந்ததாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்து உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலக நிர்வாக உதவியாளர் தங்கராஜ்மாரியப்பன் குழுவினர் செய்திருந்தனர்.

Next Story