பாஸ்போர்ட்டு சிறப்பு முகாம்
திருச்சி மற்றும் தஞ்சையில் உள்ள பாஸ்போர்ட்டு சேவை மையங்களில் பாஸ்போர்ட்டு பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
திருச்சி,
இந்த முகாமில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். திருச்சியில் நடந்த பாஸ்போர்ட்டு சிறப்பு முகாமில் வழக்கமாக விண்ணப்பதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டிய அனைத்து ஆவணங்களுடன் பலர் விண்ணப்பித்தனர். வழக்கமான நடைமுறைகளிலேயே அவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சிறப்பு முகாமில் பங்கேற்றவர்களில் திருச்சியில் ஏற்கனவே 450 பேருக்கும், தஞ்சையில் 575 பேருக்கும் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாஸ்போர்ட்டு முகாமிற்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி லிங்கசாமி மற்றும் அதிகாரிகள் செய்து இருந்தனர்.

Next Story