கொள்ளிடம் அருகே குடிபோதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து மரம் வெட்டும் தொழிலாளி கைது


கொள்ளிடம் அருகே குடிபோதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து மரம் வெட்டும் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 Feb 2017 3:45 AM IST (Updated: 12 Feb 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய மரம் வெட்டும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளிடம்,

வாலிபருக்கு கத்திக்குத்து

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே அரசூர் மேலத்தெருவை சேர்ந்த பிரகாஷ் மகன் செல்வராஜ் (வயது 20). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சண்முகராஜ் (25). இவர்கள் 2 பேரும் மரம் வெட்டும் தொழிலாளிகள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்துவிட்டு 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்து மதுகுடித்தனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து குடிபோதையில் இருந்த 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜ், தான் வைத்து இருந்த கத்தியால் செல்வராஜை குத்தினார்.

கைது

இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகராஜை கைது செய்தனர். 

Next Story