கொள்ளிடம் அருகே தட்டம்மை தடுப்பூசி முகாம்


கொள்ளிடம் அருகே தட்டம்மை தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:00 AM IST (Updated: 12 Feb 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே தட்டம்மை தடுப்பூசி முகாம்

கொள்ளிடம்,

கொள்ளிடம் அருகே நல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தட்டம்மை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, அரிமா சங்க நிர்வாகிகள் ஜலபதி, துரை, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார மேற்பார்வையாளர் கருணாகரன் வரவேற்றார். இதில் கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் வாசுதேவன் கலந்து கொண்டு தட்டம்மை விழிப்புணர்வு குறித்து பேசினார். முகாமில் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து கொள்ளிடம் பகுதியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் தட்டம்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடப்பட்டு வருவதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். 

Next Story