புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என திருவாரூரில் நடந்த சாலை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்,
பேரவை கூட்டம்
திருவாரூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொன்முடி முன்னிலை வகித்தார். இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோதண்டபாணி, மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர்் சோமசுந்தரம ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்்மானங்கள் வருமாறு:-
கருணை பணி
பணி நீக்கப்பட்ட காலத்்தில் இறந்த சாலை பணியார்கள் 87 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்கள் 41 மாத பணி நீக்கம் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஆர்.சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Next Story