கரூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 757 வழக்குகளுக்கு தீர்வு
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று கரூர் கோர்ட்டில் நடந்தது.
கரூர்,
இதற்கு மாவட்ட நீதிபதி ஹேமலதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் வங்கி காசோலை வழக்குகள், வங்கி சிவில் வழக்குகள், வங்கி வாராக்கடன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு, கிரிமினல், தொழிலாளர் நஷ்டஈடு வழக்குகள் மற்றும் தொலைபேசி வாராக்கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் என மொத்தம் 11 ஆயிரத்து 537 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் மொத்தம் 3 அமர்வுகள் நடத்தப்பட்டன. இறுதியில் 757 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.16 கோடியே 13 ஆயிரத்து 643 நிவாரணத்திற்கான காசோலையை உரியவர்களிடம் மாவட்ட நீதிபதி வழங்கினார். இதில் தலைமை குற்றவியல் நீதிபதி பார்த்தசாரதி, முதன்மை சார்பு நீதிபதி மணி உள்ளிட்ட நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story