வேலை வாய்ப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை


வேலை வாய்ப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 12 Feb 2017 4:15 AM IST (Updated: 12 Feb 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அரசு கலைக்கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கரூர்,

வேலை வாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று கரூர் அரசு கலைக்கல்லூரியில் நடந்தது. இந்த முகாமில் கரூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதன்படி வேலை கேட்டு வந்தவர்கள் தங்களது பெயர், முகவரி, படித்த பட்டம், அனுபவம் உள்ளிட்டவைகளை அலுவலர்களிடம் பதிவு செய்தனர். பின்னர் பதிவு செய்த ஒப்புகை சீட்டை வைத்துக்கொண்டு அங்கு வந்திருந்த பல்வேறு நிறுவன பிரதிநிதிகளிடம் வழங்கினர். அதன்படி தங்களுக்கு தேவையானவர்களை வேலைக்கு தேர்வு செய்தனர்.

மாற்றுத்திறனாளிகள்

இந்த முகாமில் அரவக்குறிச்சியை சேர்ந்த ஜானகி(வயது 27) என்ற பி.காம். பட்டதாரி பெண் தனது பெண் குழந்தையுடன் வந்து கலந்து கொண்டார். இதே போன்று தரகம்பட்டியை சேர்ந்த பட்டதாரிகளான மாற்றுத்திறனாளி பெண்கள் நாகேஸ்வரி(23), அமுதா(30) ஆகிய 2 பேர் 3 சக்கர வாகனத்தில் வந்து கலந்து கொண்டனர். இது குறித்து நாகேஸ்வரியிடம் கேட்டபோது, எம்.ஏ., பி.எட். பட்டதாரியான நான் பல முறை இது போன்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளி என்பதால் வேலை கொடுக்க மறுக்கிறார்களோ என்று தெரியவில்லை. பி.எட். படிப்புக்கு நான் வேலை கேட்கவில்லை. எம்.ஏ. படிப்பிற்கு ஏதாவது அலுவலகத்தில் வேலை தான் கேட்கிறேன் என்று கூறினார்.

முன்னுரிமை

அமுதா கூறியதாவது:- இதுபோன்ற முகாமில் கலந்து கொண்டே இருக்கிறேன். ஆனால் வேலை தான் கிடைக்கவில்லை. காரணம் புரியவில்லை. மாற்றுத்திறனாளி என்பதால் வேலை கொடுக்க மறுக்கிறார்களோ என்று தெரியவில்லை. எனவே இது போன்ற இலவச வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை வைக்கிறேன் என்று கூறினார். ஏராளமானவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story