மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் கல்லூரி மாணவர், ஜவுளி வியாபாரி சாவு
மேட்டுப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர், ஜவுளிவியாபாரி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சாமி கும்பிட சென்றனர்
மேட்டுப்பாளையத்தை அடுத்து உள்ள சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம் மோத்தேபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் பூர்ணசந்திரன் (19). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பூர்ணசந்திரன் தனது நண்பர் பிரவீன்ஜோதி (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம்-அன்னூர் மெயின் ரோட்டில் உள்ள குமரன் குன்று கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
லாரி மோதியது
சாமிகும்பிட்டுவிட்டு 2 பேரும் மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பிரவீன்ஜோதி ஓட்டினார். பூர்ணசந்திரன் பின்னால் அமர்ந்து இருந்தார். அவர்கள் வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக நால்ரோடு அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு சென்று உள்ளனர். அங்கு பெட்ரோல் போட்டுவிட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் தேரம்பாளையம் குடோன் தோட்டம் அருகில் வந்தபோது, எதிரே வந்த லாரி கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரவீன்ஜோதி, பூர்ணசந்திரன் ஆகியோர் தூக்கிவீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த பிரவீன் ஜோதி, சிறுமுகையை அடுத்து உள்ள பள்ளேபாளையம் கணபதி நகரை சேர்ந்த ரங்கசாமி என்பவருடைய மகன் ஆவார். பிரவீன்ஜோதி, மேட்டுப்பாளையம் பங்களாமேடு பகுதியில் ஜவுளிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இறந்த 2 பேரின் உடலைப்பார்த்து அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுத காட்சி, பார்த்தோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story