தைப்பூச ஜோதி தரிசன விழா


தைப்பூச ஜோதி தரிசன விழா
x
தினத்தந்தி 12 Feb 2017 4:00 AM IST (Updated: 12 Feb 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாதாக்கோட்டை சாலை பசு நகரில் உள்ள அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை சார்பில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது.

கள்ளப்பெரம்பூர்,

விழாவிற்கு சுனிதாசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை நிர்வாகி தம்பையா முன்னிலை வகித்தார். விழாவில் சன்மார்க்க கொடி ஏற்றப் பட்டது. அதைத்தொடர்ந்து அகவல்பாராயணம், ஜோதி தரிசனம் மற்றும் இசைநிகழ்ச்சி நடந்தது. முன்னதாக 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிர்வாகி தம்பையா, ஆடை தானம் செய்தார். பின்னர் 2,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய நிர்வாகிகள், ஏழைகளுக்கு தர்மம் செய்ய விரும்புபவர்கள் அருட் பெருஞ்ஜோதி அறக்கட்டளை உருவாக்கி உள்ள வாழையடி வாழை திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றனர். முடிவில் நிர்வாகி அருண் நன்றி கூறினார். 

Next Story