முகத்துவாரம் தூர்வாரும் பணி தாமதம்: மீனவர்கள் 2-வது நாளாக போராட்டம்


முகத்துவாரம் தூர்வாரும் பணி தாமதம்: மீனவர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:00 AM IST (Updated: 12 Feb 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

புதுவை துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தாமதமாகி வருவதை கண்டித்து மீனவர்கள் 2-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் தவிப்பு

புதுவை தேங்காய்த்திட்டில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். இந்த துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்படாததால் மணல் திட்டுகள் உருவாகி படகுகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி ரூ.14 கோடி செலவில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் மணல்வாரிக் கப்பலில் ஏற்பட்ட பழுது காரணமாக குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகள் நடைபெறவில்லை. இதனால் மீனவர்கள் தொடர்ந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

2-வது நாளாக போராட்டம்

இந்தநிலையில் துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மணல் வாரி கப்பல் அருகே கடலில் இறங்கி மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக துறைமுக முகத்துவார பகுதியில் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. 

Next Story