சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது


சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது
x
தினத்தந்தி 12 Feb 2017 4:10 AM IST (Updated: 12 Feb 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடு

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக எடியூரப்பா பதவி ஏற்ற பின்பு, கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார். இதுதொடர்பாக எடியூரப்பாவுக்கும், மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை ஈசுவரப்பா தொடங்கியதால், அவர்களுக்குள் இருந்த மோதல் வலுத்தது. இதையடுத்து எடியூரப்பா, ஈசுவரப்பாவுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டை போக்க பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் சமசர கூட்டம் நடைபெற்றது.

அப்போது பா.ஜனதா கட்சி தலைவர்கள் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பில் இருக்கக்கூடாது என்றும், அந்த அமைப்பை கலைத்து விட்டு கட்சியை பலப்படுத்தும்படி ஈசுவரப்பாவுக்கும், அனைவரையும் அரவணைத்து செல்லும்படி எடியூரப்பாவுக்கும் அமித்ஷா கட்டளையிட்டார். இதனால் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு கலைக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

ஈசுவரப்பா கலந்து கொண்டார்

இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா கலந்து கொண்டார். அப்போது சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பில் சேர்ந்ததால், பா.ஜனதாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

– அரசியலுக்கு அப்பாற்பட்டது

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு அரசியலில் ஈடுபடக்கூடாது என்று தான் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு பற்றி அவரிடம் கூறியதும், வரவேற்றார். சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு சார்பில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என்று அமித்ஷா கூறவில்லை. சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அந்த அமைப்பு தொடங்கி 7 மாதங்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதே இதற்கு சாட்சி.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை, எளியவர்களுக்காக தொடங்கப்பட்டது தான் இந்த அமைப்பு. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் இதற்காக மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் உள்பட 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டுக்கு மத்திய மந்திரிகளை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.


Next Story