சித்தராமையா மீது ஆதாரம் இல்லாமல் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல
சித்தராமையா மீது ஆதாரம் இல்லாமல் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல என்று மந்திரி உமாஸ்ரீ கண்டனம் தெரிவித்து உள்ளார்
பெங்களூரு,
முதல்–மந்திரி சித்தராமையா மீது ஆதாரம் இல்லாமல் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல என்று மந்திரி உமாஸ்ரீ கண்டனம் தெரிவித்து உள்ளார்
. மந்திரி உமாஸ்ரீபாகல்கோட்டை மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேற்று மந்திரி உமாஸ்ரீ பார்வையிட்டார். மேலும் அவர் விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் முதல்–மந்திரி சித்தராமையா தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் மேலிடத்துக்கு ரூ.1,000 கோடி கொடுத்திருப்பதாக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா குற்றம் சாட்டி இருப்பது குறித்து மந்திரி உமாஸ்ரீயிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:–
ஆதாரம் இல்லாமல்...முதல்–மந்திரி சித்தராமையா தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள கட்சி மேலிடத்துக்கு ரூ.1,000 கோடி கொடுத்திருப்பதாக எடியூரப்பா குற்றம் சாட்டி இருப்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. முதல்–மந்திரி மீது தேவையில்லாமல் எடியூரப்பா குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். கட்சி மேலிடத்துக்கு ரூ.1,000 கோடி கொடுத்தது தொடர்பாக எடியூரப்பாவிடம் என்ன? ஆதாரம் இருக்கிறது. அவ்வாறு இருந்தால், அதனை அவர் உடனடியாக வெளியிட வேண்டும். ஆதாரம் இல்லாமல் முதல்–மந்திரி மீது எடியூரப்பா குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல. இது கண்டிக்கத்தக்கது.
ஒரு கட்சியின் மாநில தலைவர், முன்னாள் முதல்–மந்திரியாக இருந்தவர் எடியூரப்பா. பொறுப்புள்ள பதவியில் இருந்து கொண்டு இதுபோன்று ஒரு முதல்–மந்திரி மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தக்கூடாது. அரசியல் ஆதாயத்திற்காக முதல்–மந்திரி மீது எடியூரப்பா கூறும் குற்றச்சாட்டுகளை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்களை குறி வைத்து மாநிலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு மந்திரி உமாஸ்ரீ கூறினார்.