திருவள்ளூர் அருகே பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது


திருவள்ளூர் அருகே பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2017 4:30 AM IST (Updated: 12 Feb 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.

தற்கொலை

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). பெயிண்டர். இவரது மனைவி நாகஜோதி (27). இவர்களுக்கு அரிபிரியா (3½) என்ற மகளும், பரத் (2½) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் தன்னுடைய மனைவியை தகாத வார்த்தையால் பேசி அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நாகஜோதி தன்னுடைய அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கைது

இது குறித்து நாகஜோதியின் தந்தை ராஜேந்திரன் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜ்குமாரை நேற்று கைது செய்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது. 

Next Story