விடுதிகள், திருமண மண்டபங்களில் போலீசார் சோதனை வாகன சோதனையும் தீவிரம்


விடுதிகள், திருமண மண்டபங்களில் போலீசார் சோதனை வாகன சோதனையும் தீவிரம்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:36 AM IST (Updated: 12 Feb 2017 4:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள விடுதிகள், திருமண மண்டபங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க...

தமிழகத்தில் நிலவும் அசாதாரண நிலைமையை பயன்படுத்தி சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சமூக விரோதிகள், ரவுடிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் சென்னை நகரில் ஊடுருவி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள லாட்ஜூகள், தனியார் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் உள்பட இடங்களில் குற்றச்செயல்களில் தொடர்புடைய சமூக விரோதிகள், ரவுடிகள் யாரேனும் பதுங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறியும் வகையில், போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
லாட்ஜூகள், தங்கும் விடுதிகளில் தங்கி இருப்பவர்களுடைய பெயர், ஊர் விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு

சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை நகரின் நுழைவுவாயில்கள் மற்றும் நகர் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

பொதுமக்களுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாத வகையில் தொடர்ந்து பாதுகாப்பு பணியை மூத்த போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையிட வேண்டும் என்று கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story