நாக்பூரில் அசோக் சவான் மீது மை வீச்சு
நாக்பூர் மாநகராட்சி தேர்தலையொட்டி ஹசன்பாக் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொது கூட்டம் நடந்தது.
நாக்பூர்,
நாக்பூர் மாநகராட்சி தேர்தலையொட்டி ஹசன்பாக் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்–மந்திரி அசோக் சவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேடையில் முன்னாள் மந்திரி நசீம் கான் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென ஒருவர் மேடையில் ஏறினார். அவர் அசோக் சவானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடியே அவர் மீது கருப்பு மையை வீசினார். இதில் மை அசோக் சவான் மற்றும் முன்னாள் எம்.பி. விலாஸ் முதேம்வார் மீதும் பட்டது. ஆவேசமடைந்த தொண்டர்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். போலீசார் தொண்டர்களிடம் இருந்து அவரை மீட்டு கைது செய்தனர். விசாரணையில் அவர் லலித் பகேல் (வயது 28) என்பதும், சுமை தூக்குவோர் சங்க உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story