ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 72 வழக்குகளுக்கு தீர்வு ரூ.2¼ கோடி வழங்க உத்தரவு
ராணிப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட கூடுதல் நீதிபதி வினோபா, சார்பு நீதிபதி தஸ்னீம், மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாண்டில்யன், ஓய்வு பெற்ற நீதிபதி க
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட கூடுதல் நீதிபதி வினோபா, சார்பு நீதிபதி தஸ்னீம், மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாண்டில்யன், ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் 48 வாகன விபத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 40ஆயிரத்து 161 ரூபாயும், 8 உரிமையியல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.23 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும், சார்பு நீதிமன்றத்தின் 13 வழக்குகளில் தீர்வு காணப்பட்டதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.78 லட்சத்து 43 ஆயிரத்து 994 ரூபாயும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் (முன்சீப் கோர்ட்) மூலம் 3 காசோலை மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1 லட்சத்து 75ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டது.
இதன் மூலம் 100–க்கும் மேற்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு மொத்த தொகையாக ரூ.2 கோடியே 32 லட்சத்து 4ஆயிரத்து 155 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் சட்ட உதவி அலுவலர் குமரகுரு, நீதிமன்ற அலுவலர் பழனிசாமி, வக்கீல்கள் அண்ணாதுரை, குத்புதீன், முத்துக்குமார், லட்சுமணன், சங்கர், செல்வராஜ், சித்ரா மற்றும் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டனர்.