ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஒரு சரணாலயம்
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அந்த அதிசயமான அதிரடி காட்சி அரங்கேறுகிறது. அங்கிருக்கும் இயற்கை எழில்கொஞ்சும் வெள்ளிங்கிரி பகுதியில் காட்டு யானைகள் வருவது வழக்கம்.
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அந்த அதிசயமான அதிரடி காட்சி அரங்கேறுகிறது. அங்கிருக்கும் இயற்கை எழில்கொஞ்சும் வெள்ளிங்கிரி பகுதியில் காட்டு யானைகள் வருவது வழக்கம். யானைகள் வருவதை 100 அடி தூரத்திலே, காளைகள் உணர்ந்துவிடுகின்றன. உடனே கிட்டத்தட்ட 200 காளைகள் சேர்ந்து மிரட்டும் விதத்தில் சத்தம் எழுப்புகின்றன. அதை கேட்டதும், யானைகள் லேசாக மிரண்டு, அதற்கு மேல் ஒரு அடிகூட எடுத்துவைக்காமல் அப்படியே திரும்பிப்போய்விடுகின்றன.
இந்த அதிசய சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கே சென்றபோதுதான் தெரிந்தது, குத்துச்சண்டை, மல்யுத்தம் கற்றுக்கொடுக்க மையங்கள் இருப்பதுபோல் வெள்ளிங்கிரியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி கொடுக்கும் மையமும் செயல்பட்டுக் கொண்டிருப்பது. அங்கு பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் 210 காளைகள்தான், காட்டு யானைகள் தூரத்திலே வருவதை உணர்ந்து அவைகளை சத்தமிட்டே துரத்திக்கொண்டிருக்கின்றன. அது ஒரு கோசாலை. அங்குள்ள காளைகள் மதுரை மாவட்டம் மேலூர், அலங்கா நல்லூர், அவனியாபுரம், காரியாப்பட்டி, திருச்சி, சிவகங்கை, திருப்புவனம், வத்திராயிருப்பு, உசிலம்பட்டி, தேனி, கம்பம் ஆகிய ஊர்களிலிருந்து கொண்டுவரப்பட்டவை.
2014-ம் ஆண்டு மதுரையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்தவர்கள் அவைகளை விற்க முன்வந்தனர். அவற்றை வாங்கி லாரிகளில் ஏற்றி கோவைக்கு கொண்டு வந்து, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு பயிற்சி அளித்து வருகிறார்கள். பயிற்சி நடைபெறும் இந்த கோசாலையை நடத்துபவர் சிவகணேஷ்.
காளைகளை பராமரிக்கும் ஜெயமணி அவைகளுக்கு கொடுக்கப்படும் பயிற்சி பற்றி சொல்கிறார்:
“ஜல்லிக்கட்டில் இடம்பெறும் காளைகள் உயிர்போகும் கடைசி நிமிடம் வரை அவைகளின் வீரத்தையும், ஆக்ரோஷத்தையும் விட்டுக்கொடுக்காது. அவை தன்னை வளர்த்தவர்கள் மற்றும் பழக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரையும் தன் மீது கை வைக்கவிடாது. திமில் உள்பட அதன் உடலில் எங்கேயும் மற்றவர்கள் கைவைக்க அனுமதிக்காது.
இங்கே 10 முதல் 20 வயது வரை உள்ள காளைகள் இருக்கின்றன. பொதுவாக ஜல்லிக்கட்டு காளைகளின் ஆயுள் 25 முதல் 30 ஆண்டுகள். நன்றாக உணவு கொடுத்தாலும் 30 வயது வரை தான் அவை உயிருடன் இருக்கும். 5 வயது முதலே அவைகளிடம் ஆக்ரோஷ குணம் வெளிப்பட தொடங்கி விடும். பால் குடிக்கும் கன்று பருவத்திலேயே அதனிடம் வீரம் வெளிப்படும்.
காளைகள் 10 முதல் 20 வயது வரை ஜல்லிக்கட்டில் புகுந்து விளையாடும். கட்டிவைத்திருக் கும் இடத்திலேயே அவை ஒன்றோடொன்று மோதும். அதனால் அவைகளுக்குள் மோதல் வராத அளவுக்கு இடைவெளிவிட்டு கட்டி வைத்திருப்போம். ஜல்லிக்கட்டு போட்டியின் போது கயிற்றினால் கட்டி வைத்திருக்கும் வரை தான் அவை கட்டுப்பாட்டில் இருக்கும். கயிற்றை அவிழ்ந்துவிட்டதும் மாடு பிடி வீரர்கள் மீது பாயத் தொடங்கி விடும். கயிற்றை எளிதாக அறுத்துக்கொண்டு ஓடும் சக்தி அதற்கு உண்டு.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மூன்றுவிதமான பயிற்சிகள் கொடுக்கிறோம். ஒன்று, மண்ணை குத்தும் பயிற்சி. அடுத்து நடைப்பயிற்சி. மற்றொன்று நீச்சல் பயிற்சி. அவை ஆக்ரோஷத்தோடு தரையில் உள்ள மண்ணை கொம்பால் குத்தி மேலே தூக்கி வீசும். சுமார் 10 கிலோ எடையுள்ள மண்ணை 3 முதல் 6 அடி உயரத்துக்கு தூக்கி வீசும் சக்தி அதற்கு இருக்கிறது. இந்த பயிற்சியை ஒவ்வொரு காளைக்கும் 2 மணி நேரம் வரை கொடுப்போம். தினமும் 3 கி.மீ. தூர நடைப்பயிற்சியும் அளிக்கவேண்டும். குளத்தில் நீச்சல் பயிற்சியும் வழங்குவோம்.
ஜல்லிக்கட்டு காளை ஒரு டன் (ஆயிரம் கிலோ) எடை இருக்கும். எடையை கண்காணித்து, குறைந்தால் அதற்கு கூடுதலாக உணவு கொடுப்போம். அதே நேரத்தில் எடை மிக அதிகமாகிவிடவும்கூடாது. எடை அதிகமானால் அதன் உடல் கட்டமைப்பு கெட்டு விடும். அதனால் அதற்கு கொடுக்கும் உணவின் அளவை குறைத்துவிடுவோம்.
காளைகளை கோவிலுக்கு கொண்டு சென்று அதற்கு கற்பூரம் காண்பித்து விபூதியை அதன் மீது போட்ட பின்னர்தான் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கொண்டு செல்வோம். கோவிலுக்கு கொண்டு செல்லும்போதே, காளைகள் ஜல்லிக்கட்டில் இடம்பெறப்போவதை உணர்ந்துவிடும்.
காளைகளுக்கு மோப்ப சக்தி அதிகம். அதை பயன்படுத்திதான் தூரத்திலே யானைகள் வருவதை உணர்ந்து, அவைகளை துரத்து கின்றன. அவை புல் மற்றும் மூலிகை செடிகளை தின்பதால் அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கின்றன. 30 வயதுக்கு மேல் உள்ள காளைகள் வயது முதிர்வு காரணமாக இறந்து விடும்.
வீடுகளில் ஒன்றிரண்டு காளைகளை வளர்ப்பவர்கள் அவற்றிற்கு தினமும் அரை கிலோ சுண்டல்கடலை, ஒரு கிலோ பச்சரிசியை வேக வைக்காமல் அப்படியே தீவனமாக கொடுப்பார்கள். ஒரு கிலோ பருத்திக் கொட்டையும், 250 கிராம் பேரீச்சம் பழமும் தினமும் கொடுப்பதுண்டு. நீச்சல் பயிற்சி முடிந்ததும் நாட்டுக் கோழி முட்டையும் கொடுப்பார்கள்.
வீடுகளில் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைகளை போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்து வெளியாட்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள். காளை மாடுகளுக்கு மோப்ப சக்தி அதிகம். வளர்த்த வர்கள் தவிர மற்றவர்களின் வாசனையை அறிந்து அவர்களை தன் பக்கம் நெருங்க விடாது. மாடுபிடிப்பவர்களை நெருங்கவிடாமல் எதிர்க்கவேண்டும் என்பதற்காக அவ்வாறு ஜல்லிக்கட்டு காளைகளை மறைத்துவைக்கிறார்கள்.
நாங்கள் வளர்க்கும் காளைகளுக்கு தினமும் 3 கிலோ தவிடு, 2 கிலோ உளுந்தம் தோல், 2 கிலோ கோதுமை தவிடு, ஒரு கிலோ கோதுமை பிசிறு என தினமும் 8 கிலோ உணவு கொடுக்கப்படுகிறது. இதுதவிர வைக்கோல், மக்காச்சோளத் தட்டை, பச்சைப் புல் ஆகியவைகளும் வழங்கப்படும். காலையில் 8 முதல் 10 லிட்டர் தண்ணீர், மாலையில் 5 லிட்டர் தண்ணீரும் கொடுக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டு ஆரோக்கிய மாகவும், சுகாதாரமாகவும் மாடுகளை பேணவும் செய்வோம்” என்றார்.
பயிற்சியுடன்கூடிய கோசாலையை நடத்தும் சிவகணேஷ் சொல்கிறார்:
“தமிழகத்திலிருந்து கோவை மற்றும் பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு இறைச்சிக்காக மாடுகளை கொண்டு செல்வதை பார்த்து மனங்கலங்கிப்போனேன். அவைகளை காப்பாற்ற கோசாலை தொடங்கினேன். அத்தகைய மாடுகளை போலீசார் அனுமதியோடு மீட்டு, கோசாலையில் பராமரித்து வந்தேன்.
இந்த நிலையில், 2014-ம் ஆண்டு மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது, அந்த பகுதியில் உள்ள மக்கள் மனம்நொந்துபோய் தங்களிடம் இருந்த ஜல்லிக்கட்டு காளைகளை விற்க முன்வந்தார்கள். அவை அடிமாடுகளாகி விடக்கூடாது என்று நினைத்து, விலை கொடுத்து வாங்கி கோசாலையில் பராமரித்து, பயிற்சியும் அளித்து வருகிறேன்” என்றார்.
இவரது கோசாலையில் முதன்முதலாவதாக சேர்ந்த மாட்டின் பெயர் முத்து. ஈரோட்டில் குடிசை வீட்டின் அருகில் பசு ஒன்று கட்டப்பட்டிருந்திருக்கிறது. குடிசை எரிந்ததால் அந்த பசுவும் தீக்காயமடைந்துவிட்டது. அதை மீட்டு, கோவைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்திருக்கிறார். அது ஈன்ற கன்றுக்கு முத்து என்று பெயர் சூட்டி, தனது கோசாலையில் சேர்த்துள்ளார். கோவையில் ஜல்லிக்கட்டு நடத்தவும் இவர் அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறார். நாட்டு காளை இனங்கள் அழிந்துபோகாமல் இருக்க, இனப்பெருக்க முறைகளை கையாளவும் திட்டமிட்டிருக்கிறார். இவருடைய கோசாலையில் ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமின்றி பசுக் களும், எருமைகளும் ஆயிரத்துக்கும் மேல் பராமரிக்கப்படுகின்றன.

Next Story