தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் தேர்வு


தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் தேர்வு
x
தினத்தந்தி 13 Feb 2017 1:30 AM IST (Updated: 12 Feb 2017 5:31 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை தொழில் முனைவோர் புதிதாக தொழில் தொடங்குவதற்கு 25 சதவீதம் மானியத்துடன் வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி,

தமிழ்நாடு அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை தொழில் முனைவோர் புதிதாக தொழில் தொடங்குவதற்கு 25 சதவீதம் மானியத்துடன் வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. இந்த தொழில் முனைவோரை தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான நேர்காணல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரவிகுமார் தலைமையில் நடந்தது.

மாவட்ட தொழில் மையம், கதர் கிராமம் தொழில் வாரியம் மற்றும் கதர் கிராமத் தொழில் ஆணையம் மூலம் பெறப்பட்ட புதிய தொழில் தொடங்குவதற்கான தொழில் முனைவோர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.


Next Story