முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை
தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் மக்களின் குடிநீர் தேவைக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இரைச்சல் பாலம் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முதல் 225 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முல்லைப்பெரியாறு 152 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 110.80 அடி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 28 கன அடி நீர்வரத்து உள்ளது. 225 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 1,038 மில்லியன் கன அடி ஆகும்.
நீர்வரத்து
இதேபோல் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 22.44 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 28 கனஅடி நீர்வரத்து இருக்கிறது. 40 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடியாகும். அணையில் தற்போது 33.60 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம் இல்லை. அணையில், 110.04 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. சோத்துப்பாறை அணையின் மொத்த உயரம் 126 அடி ஆகும். இந்த அணையில் நேற்றைய நிலவரப்படி 67.07 அடி தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 3 கனஅடி நீர்வரத்து உள்ளது. மேலும் அணையில் இருந்து 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story