இன்று உலக வானோலி தினம் தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும் மக்களிடம் மவுசு குறையாத வானொலி
இன்று உலக வானொலி தினமாகும். தொழில் நுட்பங்கள் வளர்ச்சி அடைந்த இந்த காலத்திலும் மக்களிடம் வானொலி மவுசு குறையாமல் இருக்கிறது.
நவீன தொழில் நுட்பங்கள் தற்போது அசூர வளர்ச்சியடைந்து வருகிறது. டி.வி., ஆன்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் எண்ணற்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பல வந்துவிட்டன. ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தது வானொலி தான் என்றால் அதை மறுக்க முடியாது. இதனால் தான் மக்கள் தொடர்பு ஊடகத்தின் முன்னோடியாக வானொலி இருந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 13–ந்தேதி உலக வானொலி தினம் கடை பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று(திங்கள்கிழமை) உலக வானொலி தினமாகும்.
பேரிடர் காலத்திலும் இயங்க கூடியதுவானொலியை பொறுத்தவரையில் மின்வசதி கிடைக்கப்பெறாதா பகுதி, மலை கிராமங்கள் என்று மக்கள் எங்கும் வசிக்கும் இடங்களில் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் பேரிடர் காலங்களிலும் தடையின்றி இயங்க கூடியது வானோலியே ஆகும். இதனால் தான் இன்றும் இதன் மவுசு மக்களிடம் குறையவில்லை.
இன்று, இளம் தலைமுறைகளின் கைகளில் ஆன்ட்ராய்டு செல்போன்கள் தான் தவழ்கின்றன. ஆனால் பழமை மறவாத முதியவர்கள் இன்றும் வானொலியை தான் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வரிசையில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரம் தையல் கடை வைத்து இருக்கும் முதியவரும் ஒருவர் உள்ளார். பழைய துணிகள் தைக்கும் இவர், தனது வேலை நேரத்திற்கு இடையே கிடைக்கும் நேரங்களில் வானொலியை கேட்க தவறுவதில்லை.