பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் ஒழிப்பு முகாம்
சிவகாசி நகர் காவல் துறை சார்பாக அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் கமல் நற்பணி மன்றம் இணைந்து பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் ஒழிப்பு முகாமினை நடத்தியது.
சிவகாசி,
சிவகாசி நகர் காவல் துறை சார்பாக அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் கமல் நற்பணி மன்றம் இணைந்து பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் ஒழிப்பு முகாமினை நடத்தியது. முகாம் சிவகாசி நகர் மற்றும் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. முகாமிற்கு நகர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். முகாமினை மாவட்ட உரிமையியல் நீதிபதி மனோஜ்குமார் மற்றும் சாந்தகுமார் தொடங்கி வைத்தனர். முகாமில் நாடக கலைஞர்கள் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீனால் ஏற்படும் தீமைகள் குறித்து தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர். முடிவில் சிவகாசி கிழக்கு காவல் ஆய்வாளர் சீனிவாசன் நன்றியுரை ஆற்றினார்.
Next Story