ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன ஊர்வலம் நாராயணசாமி தொடங்கி வைத்தார்


ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன ஊர்வலம் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Feb 2017 3:15 AM IST (Updated: 13 Feb 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு தலையில் அடிபட்டு மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைதடுக்கும் விதமாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் வருகிற மே 1–ந்தேதி முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன்படி நேற்று இருசக்கர வாகன ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக போலீசார், தனியார் நிறுவன ஊழியர்கள் ஹெல்மெட்டுடன் கடற்கரைக்கு வந்து இருந்தனர். கடற்கரை காந்தி சிலை அருகே அவர்கள் ஊர்வலமாக ஹெல்மெட் அணிந்தபடி புறப்பட்டனர்.

நாராயணசாமி

இதை முதல்–அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன், போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இருசக்கர வாகனங்களில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story