காரணைப்புதுச்சேரி ஏரியில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி
வண்டலூர்
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 32), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை வீட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை காரணைப்புதுச்சேரி ஏரியில் பாலாஜி பிணமாக மிதந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் பிணமாக மிதந்த பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். பாலாஜி ஏரியில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story