உடுமலை நகராட்சி குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது புகையால் பொதுமக்கள் பாதிப்பு
உடுமலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு மர்ம ஆசாமிகள் வைத்த தீயால் குப்பை கிடங்கு தீப்பற்றி எரிந்தது. இதில் ஏற்பட்ட புகையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
குப்பை கிடங்கு
உடுமலை நகராட்சி பகுதி 7.41 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த 33 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பைகள் நகராட்சியின் லாரிகள் மூலம் பொள்ளாச்சி சாலையில் கணபதிபாளையம் பிரிவில் உள்ள நகராட்சி உரக்கிடங்குக்கு (குப்பைகிடங்கு) கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரித்து வருகின்றனர். இந்த உரக்கிடங்கு 6.73 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
தீ வைப்பு
இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பையில் நேற்றுமாலை 3 மணி அளவில் யாரோ மர்ம ஆசாமிகள் தீ வைத்துள்ளனர். இதில் குப்பை கிடங்கில் தீ மளமள வென்று பற்றி எரிந்தது. இந்த தீயினால் பல அடி உயரத்திற்கு புகை கிளம்பியது.
இந்த புகை காற்று வீசிய திசையான மேற்கு பகுதி நோக்கி பல கிலோ மீட்டர் தூரம் சென்றது. இந்த புகையினால் அந்த பகுதியில் உள்ள தென்னை மரங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் பெரிதும் கவலைப்பட்டனர்.
பொதுமக்கள் அவதி
மேலும் பொள்ளாச்சி சாலையில் இருந்து பல அடி தூரத்தில் உள்ள இந்த குப்பை கிடங்கில் இருந்து புகை அதிகளவு வந்ததால் சாலையில் சென்றவர்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் வாகனங்களில் சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி தீவிபத்து ஏதும் ஏற்பட்டு விட்டதா என்ற அச்சத்தில் பார்த்து சென்றனர். குப்பை கிடங்கில் தீ பற்றியது குறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உடுமலை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story