கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் மீன்வளம் அழியும் அபாயம்


கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் மீன்வளம் அழியும் அபாயம்
x
தினத்தந்தி 13 Feb 2017 1:58 AM IST (Updated: 13 Feb 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் மீன்வளம் அழியும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராமேசுவரம்,

ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி ஒரு சில மீனவர்கள் மீன்பிடிப்பதால் மீன்வளம் அழியும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்வளம்

ராமேசுவரம், தனுஷ்கோடியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் ஒரு சில மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் மீன்வளம் அழியும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிக்கும் விசைப்படகு, நாட்டுப்படகுகளை தடுக்க வேண்டிய மீன்துறை அதிகாரிகள் அதை தடுக்காமல் உள்ளனர் என்று மீனவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

ரோந்து பணி

எனவே ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களை கண்காணிக்க கடலோர காவல் படையினரும், தமிழக கடலோர போலீசாரும், மீன்துறை அதிகாரிகளும் ரோந்து பணியில் வேண்டும். தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story