நகை திருட்டு புகார்: சென்டிரலில் 3 ஆந்திர பெண்கள் கைது


நகை திருட்டு புகார்: சென்டிரலில் 3 ஆந்திர பெண்கள் கைது
x
தினத்தந்தி 13 Feb 2017 3:00 AM IST (Updated: 13 Feb 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

நகை திருட்டு புகார்: சென்டிரலில் 3 ஆந்திர பெண்கள் கைது புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நகைகள் திருடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்டிரலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனையிட்டதில் 4 தங்க சங்கிலிகள் தனியாக ஒரு பையில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அவர்கள் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

போலீசார் விசாரணையில் பிடிபட்ட பெண்கள் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த பத்மா (வயது 40), துர்கா (45), மல்லிகா (55) என்பது தெரியவந்தது. மேலும் பார்ப்பதற்கு வசதியான வீட்டு பெண்களை போன்று உடையணிந்து ரெயில் நிலையத்தையே வலம் வருவதும், தனியாக சிக்கும் பெண்களிடம் நைசாக பேசி நகைகளை கொள்ளையடித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பெண்கள் மீதும் ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story