சேலம் மாநகராட்சியில் 2.15 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்


சேலம் மாநகராட்சியில் 2.15 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
x
தினத்தந்தி 13 Feb 2017 4:00 AM IST (Updated: 13 Feb 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சியில் 2.15 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாகவும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 645 மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக அல்பென்டசோல் மாத்திரைகள் பெறப்பட்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங்குவதற்கு மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரைகள் பள்ளிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி சகாதேவபுரம் பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அல்பென்டசோல் மாத்திரைகளை தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் வழங்கினார்.

இதன்மூலம் மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும், ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் நீங்கி, ஆரோக்கியமாவும், சுறுசுறுப்பாகவும், இருக்க குடற்புழு நீக்க மாத்திரைகள் பயன்படும். மேலும் தற்போது விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 15–ந் தேதி இந்த மாத்திரைகள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் தெரிவித்தார்.


Next Story