16–ந் தேதி சேலத்திற்கு வரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்
வருகிற 16–ந் தேதி சேலத்திற்கு வரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம்,
செயற்குழு கூட்டம்
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் சேலம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் எஸ்.டி.கலையமுதன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜி.கே. சுபாசு, மாநகர செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ஆர். ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில், வருகிற 17–ந் தேதி சேலத்தில் நடக்கும் தி.மு.க. சொத்து பாதுகாப்பு வக்கீல் பிரிவு தலைவர் வெ.ரவி இல்ல திருமண விழாவிற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிறார். அதற்காக அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு 16–ந் தேதி மாலை சேலம் வந்தடைகிறார்.
உற்சாக வரவேற்பு
செயல் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக சேலத்திற்கு வரும் மு.க.ஸ்டாலினுக்கு, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பகுதி, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் என தி.மு.க.வின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.
பிறந்தநாள்
கூட்டத்தில், அடுத்த மாதம் (மார்ச்) 1–ந் தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை எழுச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்றும், அன்றைய தினம் சேலம் மத்திய மாவட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், மாணவ–மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது, மரக்கன்றுகள் நடுதல், கழக கொடியேற்றி பொதுமக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் சூடாமணி, ராஜேந்திரன், துணை செயலாளர் ரகுபதி, மற்றும் நிர்வாகிகள் நாசர்கான், ரெயின்போ நடராஜன், வக்கீல் அண்ணாமலை, பச்சியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story