கண்ணப்பன் உடலுக்கு, மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்


கண்ணப்பன் உடலுக்கு, மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்
x
தினத்தந்தி 13 Feb 2017 4:15 AM IST (Updated: 13 Feb 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

கண்ணப்பன் உடலுக்கு, மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்

திருச்சி,

திருச்சியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், தொழில் அதிபருமான வீகேயென் கண்ணப்பன் உடல் நலக்குறைவினால் நேற்று மரணம் அடைந்தார். தில்லைநகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்தது. திருச்சிக்கு விமானம் மூலம் வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கண்ணப்பன் வீட்டிற்கு சென்று அவருடைய உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடைய மகன்களுக்கு ஆறுதல் கூறினார். சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு ஸ்டாலின் மீண்டும் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவரிடம் பேட்டி எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்டாலின், நான் மறைந்த கண்ணப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தான் திருச்சிக்கு வந்தேன். எனவே இங்கு அரசியல் எதுவும் பேச மாட்டேன், என்று கூறினார். கண்ணப்பன் கட்சிக்காக செய்த பணிகள் பற்றி மட்டும் பேசினார். ஸ்டாலினுடன் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. வந்திருந்தார். 

Next Story