குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்


குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2017 4:15 AM IST (Updated: 13 Feb 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குத்தாலம்,

உக்தவேதீஸ்வரர் கோவில்

குத்தாலத்தில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான பெரிய கோவில் என்று அழைக்கப்படும் உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 57 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதன்பிறகு கும்பாபிஷேகம் தற்போதுவரை நடைபெறவில்லை. இதனால் கோவில் சிற்பங்கள், மதில் சுவர், உட்பிரகாரங்கள் உள்ளிட்டவை சிதலமடைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருப்பணி தொடங்குவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து எந்தவித திருப்பணியும் அந்த கோவிலில் மேற்கொள்ளப்படவில்லை.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருப்பணி செய்து உடனே கும்பாபிஷேகம் நடத்தக்கோரி பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு சிறப்பு வாய்ந்த பாடல்பெற்ற ஸ்தலமான குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் 30 நாட்களுக்குள் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணியை தொடங்க வேண்டும், இல்லை என்றால் பொதுமக்கள் சார்பில் திருப்பணி கமிட்டி அமைத்து கோவிலில் திருப்பணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story