பள்ளி பரிமாற்ற திட்ட கண்காட்சி
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பாக பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளின் கண்காட்சி இலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியும், இலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இணைந்து பள்ளி பரிமாற்றத்திட்டத்தில் கல்வி கற்கும் நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியை இலையூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுமதி தொடங்கி வைத்தார். இதில் ஆண்டிமடம் வட்டார ஆசிரியர் பயிற்றுனர்களும், இலையூர் மற்றும் செங்குந்தபுரம் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இருபள்ளிகளிலும் இருந்து தலா 20 மாணவர்கள் கலந்துகொண்டு கல்வி பயின்றனர். ஒவ்வொரு மாதமும் செங்குந்தபுரம் பள்ளியில் ஒருநாளும், இலையூர் பள்ளியில் ஒருநாளும் மாணவர்கள் 5 மாதங்களாக 5 பாடங்களையும் கற்று வந்தனர். இலையூர் பள்ளி பரிமாற்ற திட்ட மாணவர்களின் செயல்பாடுகள் குறித்த அமைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். கண்காட்சியை ஆண்டிமடம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நீலமேகம், மதியழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இலையூர் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முன்னதாக ஆசிரியை வெண்ணிலா அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.

Next Story