எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி அழிந்து விடக்கூடாது ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்போம்
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி அழிந்து விடக்கூடாது. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்போம் என்று கரூரில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
கரூர்,
பேட்டி
தமிழகத்தில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்தால் தற்போதைய அரசியல் சூழ்நிலை பரபரப்பாக காணப் படுகிறது. முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே யார் ஆட்சி அமைப்பது என்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது. முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், நடிகர்கள், பொது மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்களான வடிவேலு(கரூர்), காமராஜ்(கிருஷ்ணராயபுரம்), கந்தசாமி(அரவக்குறிச்சி), குப்புசாமி (ஒட்டன்சத்திரம்) ஆகிய 4 பேர் நேற்று கரூரில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஜெயலலிதா சாவில் மர்மம்
எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க.வுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். இதனால் அவர், தமிழகத்தில் ஆட்சி நடத்தினார். அவரது மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா பொறுப்பு ஏற்று கட்சியை கட்டி காத்து வளர்த்து, 1½ கோடி தொண்டர்களை உருவாக்கினார். ஆட்சி பீடத்திலும் அமர்ந்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் நம்மைவிட்டு பிரிந்து சென்று விட்டார். அவரது சாவில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும். இதனை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
கவர்னருக்கு மிரட்டல்
போயஸ் தோட்டத்தை ஒரு குடும்பத்தினர் நிர்வகிக்க பார்க்கிறார்கள். குடும்ப அரசியலுக்கு எதிராக ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற சசிகலா துடிப்பதை நாடு பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்து உள்ளனர். முதல்-அமைச்சரை மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளனர். ஏன், கவர்னரை கூட மிரட்டுவது போன்று சசிகலா பேட்டி கொடுத்ததை நாடு பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.
கவர்னருக்கே இப்படி மிரட்டல் விடுக்கிறார்கள் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கப் போகிறது?. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். எங்கள் ஆதரவு, அரவணைப்பு எல்லாம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தான்.
சசிகலா திருமணத்தை நடத்தி வைத்ததே கருணாநிதி தான். மன்னார்குடிக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி அழிந்து விடக்கூடாது. எனவே முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு அளிக்க உள்ளோம். இன்று (நேற்று) அல்லது நாளை (இன்று) காலை சந்திக்க உள்ளோம். கரூரை சேர்ந்த பல முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story