ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக்க கோரி நாகர்கோவிலில் கையெழுத்து இயக்கம்
அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு, முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி, பொதுச்செயலாளர் சசிகலா அணி என 2 அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்,
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க கையெழுத்து இயக்கத்தை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதுபோல் குமரி மாவட்டத்திலும் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கினார்கள்.
நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு நடந்த இந்த கையெழுத்து இயக்கத்துக்கு மாவட்ட பால்வள தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ், சுரேந்திரன், சாம்ராஜ், பூங்கா கண்ணன் மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக்க தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக கையெழுத்திட்டனர்.

Next Story