சூரிய ஒளியில் 7,438 மாணவர்கள் நூடுல்ஸ் சமைத்தனர்


சூரிய ஒளியில் 7,438 மாணவர்கள் நூடுல்ஸ் சமைத்தனர்
x
தினத்தந்தி 13 Feb 2017 5:00 AM IST (Updated: 13 Feb 2017 5:00 AM IST)
t-max-icont-min-icon

கின்னஸ் சாதனை முயற்சியாக பயந்தரில் 7 ஆயிரத்து 438 மாணவ, மாணவிகள் சூரிய ஒளியை பயன்படுத்தி நூடுல்ஸ் சமைத்தனர்.

வசாய்

கின்னஸ் சாதனை முயற்சியாக பயந்தரில் 7 ஆயிரத்து 438 மாணவ, மாணவிகள் சூரிய ஒளியை பயன்படுத்தி நூடுல்ஸ் சமைத்தனர்.

சூரிய ஒளி

தானே மாவட்டம் பயந்தரில் சூரிய ஒளி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நேற்றுமுன்தினம் கின்னஸ் சாதனை முயற்சியாக சூரிய அடுப்பில் நூடுல்ஸ் சமைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 59 தனியார் மற்றும் மாநகராட்சி பள்ளிக்கூடங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 438 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ– மாணவிகளுக்கு தேவையான சூரிய அடுப்பு உள்ளிட்ட உபகரணங்கள் மிராபயந்தர் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன.

நூடுல்ஸ் சமைத்தனர்

அதில் மாணவ, மாணவிகள் சூரிய ஒளியை பயன்படுத்தி நூடுல்ஸ் சமைத்து அசத்தினர். இதை பதிவு செய்வதற்காக கின்னஸ் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

இதற்கு முன் கடந்த 2016–ம் ஆண்டு பயந்தரில் நடந்த சூரிய ஒளியை பயன்படுத்தி சமையல் செய்யும் நிகழ்ச்சியில் 3 ஆயிரத்து 200 மாணவர்களும், அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 780 பேரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story