நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார்.
நெல்லை
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார்.
மரக்கன்றுகள் நடும் பணிநெல்லை கொக்கிரகுளம், தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை முகநூல் நண்பர்கள் குழுவின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் கருணாகரன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை சில மாதங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் இணைந்து அகற்றினார்கள். அந்த இடங்களில் தற்போது மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு பிரசாரம்கோர்ட்டு உத்தரவின்படி, நெல்லை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அகற்றப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பராமரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களினால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்களுக்கு தெரிவித்திடும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.