மாணவர் ஸ்பெஷல்
கடினமாக வேலை செய்வதை விட, திறமையாக வேலைகளை செய்பவர்களே வாழ்வில் வெற்றி பெறுகின்றனர். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் எடிசன் என்று சொல்லலாம்.
திறமையே சிறந்தது...
எடிசன் - ஜோசப் ஸ்வான்
1881-ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த ஜோசப் ஸ்வான் [Joseph Swan] மின்சார பல்பை கண்டுபிடித்தார். அதே ஆண்டு எடிசனும் கண்டுபிடித்தார். எடிசன், ஸ்வான் இருவரும் பல்பு கண்டுபிடிக்கும் வரை ஒருவரையொருவர் சந்தித்து கொண்டது இல்லை. எடிசன் எவ்வாறு மின்சார பல்பு கண்டுபிடிக்க அமெரிக்காவில் முயற்சி செய்தாரோ, அதேபோல் ஸ்வானும் பிரிட்டனில் முயற்சி செய்தார். இருவருமே அதில் வெற்றி பெற்றனர். ஆனால் ஜோசப் ஸ்வான் என்ற ஒரு விஞ்ஞானி இருந்ததை இன்று உலகம் மறந்தேவிட்டது என்று சொல்லலாம். அதற்கு காரணம் எடிசனின் நூதன யுக்தி.
எடிசன் நூற்றுக்கணக்கான பொருட்களைக் கொண்டு மின் விளக்கின் இழைகளை சோதனை செய்தார். அப்படி சோதனை செய்ததையும் தன் கண்டுபிடிப்புடன் சேர்த்து வெளிப்படுத்தினார். புத்தாண்டு கொண்டாட்டமாக, அவர் இருந்த வீதியை மின் விளக்கு களால் அலங்கரித்து மக்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தினார். அதுபோன்ற அவரது யுக்திகள் எடிசனின் புகழை பரப்பியது.
‘சிறுகதை மன்னன்’ புதுமைப்பித்தன்
சிறுகதை ஆசிரியராகத் திகழ்ந்தவர் சொ.விருத்தாசலம் என்ற இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன். அவருடைய சிறுகதைகள் வறுமையின் விளைவுகள், சமூகச் சிக்கல்கள், மக்களின் மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. அவரது கதைகளில் கேலியும் கிண்டலும் நையாண்டியும் நிறைந்து இருக்கும். தாம் காணும் காட்சிகளையும் கருதும் கருத்துகளையும் சிறுகதைகள் வாயிலாகவே தமிழருக்கு உணர்த்த முடியும் என நம்பியவர் புதுமைப்பித்தன். புதிய கருக்கள், அதற்கேற்ற புதிய வடிவங்கள், அவற்றை வெளிப்படுத்தும் புதிய உத்திகள், புதுவகையான நடை, இரக்க நெஞ்சம் இவை எல்லாம் அவரது கதைக்குப் புத்துயிர் ஊட்டின.
சிறுகதை மன்னன் என்று பாராட்டப் பெறும் இவர், உலகத்துச் சிறந்த சிறுகதைகள், தெய்வம் கொடுத்த வரம் என்ற இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். ‘அகலிகை’ என்ற கதை எழுதிப் புரட்சி செய்த இவரே, சாப விமோசனம் என்ற மற்றொரு கதையையும் எழுதி புகழ் பெற்றார்.
ஆண்மை, கல்யாணி, பொன்னகரம் போன்ற கதைகளில் வாழ்க்கைச் சித்திரத்தை கூறியுள்ளார். வேதாளம் சொன்ன கதை, கட்டில் பேசுகிறது, கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்பன போன்ற கற்பனைக் கதைகளில் மனிதனுக்கு நிகழும் கொடுமைகளை எதிர்க்கும் பாத்திரங்களை புதுமைப்பித்தன் படைத்துள்ளார்.

Next Story